×

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு பெண்கள் சாலை மறியல்

கூடுவாஞ்சேரி:  செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பெருமட்டுநல்லூர் ஊராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வண்டலூர் கோட்டத்தில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை திறக்கப்பட்டன. இதையறிந்ததும், பெருமட்டுநல்லூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் திரண்டனர். பின்னர் திடீர் மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 24 பெண்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.  மாலை சுமார் 5.30 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.   குடிமகன்கள் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

Tags : Task Shop ,Tasmac , Tasmac,women ,road stir
× RELATED டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்