×

பொது வழியில் வீடு கட்ட எதிர்ப்பு ரேஷன் கார்டுகளை வீசி பொதுமக்கள் போராட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பழைய காலனியில் 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  கடந்த 30 ஆண்டுகளாக பொது வழி ஒன்றை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த பொது வழி தனக்கு சொந்தமானது என்று அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சாலையில் வீடு கட்டும் பணிகள் தொடங்கியுள்ளார். இதுகுறித்து கிராம மக்கள் வருவாய் துறையினரிடம் புகார் செய்தனர், நேற்று வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர்  குறிப்பிட்ட இடத்தை சர்வே செய்துக்கொண்டிருந்தனர். அப்போது, பொது வழியில் வீடு கட்டும் நபருக்கு ஆதரவாக வட்டாட்சியர் செயல்படுவதாக கூறி 130க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது  குடும்ப அட்டைகளை சாலையில் வீசி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், ஆர்.கே.பேட்டை காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது,  பொது வழியில் வீடு கட்டுவதை தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



Tags : Civilians ,houses ,road ,roads , Ration cards, civilians, struggle
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...