×

மதுபாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை: குடிமகன்கள் அதிருப்தி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 120 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த, 4ம் தேதி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால், தமிழக எல்லை பகுதியினர் அங்கு படையெடுத்தனர். இதனால், தொற்று அதிகரிக்கும் எனக்கூறி கடந்த, 7ம் தேதி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால், மறுநாள் 8ம் தேதி கடைகள் மூடப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி பெற்றது. அதனால் கடந்த 16ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 80 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் குடிமகன்களின் கூட்டத்தை குறைக்க, டோக்கன் வழங்கப்பட்டு மதுபானம் வாங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால், திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை உட்பட அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், அரசு உயர்த்திய விலையை விட குவார்ட்டர் பாட்டில் மீது ₹30ம், ஆப் பாட்டில் மீது 60ம் கூடுதலாக பெறப்பட்டது. இதனால் குடிமகன்கள் அதிருப்தியடைந்தனர்.

Tags : Citizens , Brewery, Sales, Citizens
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...