கொரோனாவில் இருந்து மீண்ட துணை ஆணையருக்கு கமிஷனர் வாழ்த்து

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அண்ணாநகர் காவல் நிலைய துணை ஆணையர் முத்துசாமிக்கு கடந்த 4ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றார்.  அங்கு, அவர் குணமடைந்து விட்டதாக கூறி, 7ம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். தனிமைக்குப்பின் முற்றிலும் குணமடைந்த அவர் நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். இவருடன் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட மேலும் 2 காவலர்களும் பணியில் சேர்ந்தனர். தகவலறிந்து அண்ணாநகர் காவல் நிலையம் வந்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன்,  துணை ஆணையாளர் முத்துசாமி மற்றும் 2 காவலர்களை வாழ்த்தி வரவேற்றார்.

Related Stories:

>