×

டெல்லியில் இருந்து சென்னை வந்த ப.சிதம்பரத்தின் கையில் முத்திரை

சென்னை: டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த முன்னாள் மத்திய அமைச்சரும்  காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் கையில், 14 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான முத்திரை பதிக்கப்பட்டது. டெல்லியிலிருந்து நேற்று பிற்பகல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை உள்நாட்டு விமானநிலையத்துக்கு வந்தது. அதில் 78 பயணிகள் இருந்தனர். இந்த விமானத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரமும் வந்தார். அனைத்து பயணிகளைப் போல் அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்பு அவர் கையில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான முத்திரை பதிக்கப்பட்டது. இதன் பின் அவர் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

Tags : Delhi ,Chidambaram , Delhi, Chennai, P Chidambaram, Stamp
× RELATED தந்தை, மகன் மரண வழக்கில் சிபிஐ...