×

தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை பள்ளிவாசல்களுக்கு பதிலாக வீடுகளில் சிறப்பு தொழுகை: ஏழை, எளியோருக்கு பல்வேறு உதவிகளை வழங்கினர்

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாட்டப்பட்டது. பள்ளிவாசல்களுக்கு பதில் வீடுகளில் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள்  ஈடுபட்டனர்.  மேலும் ஏழை எளியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை வழங்கினர். இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் கடமைகளில்  ஒன்று நோன்பு கடைப்பிடிப்பது. புனித ரமலான் மாதத்தின் போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி  கடந்த மாதம் 25ம் தேதி நோன்பு தொடங்கியது. “ஷவ்வால்” பிறை தென்பட்டதை தொடர்ந்து 25ம் தேதி( திங்கள் கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் அறிவித்தார்.

அதன்படி ரம்ஜான் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. ‌இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.  ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய  உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் இஸ்லாமியர்கள் வழங்கினர். வழக்கமாக பள்ளிவாசல் மற்றும் முக்கிய இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பள்ளிவாசல், முக்கிய இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெறவில்லை.

அதற்கு பதிலாக இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கள் குடும்பத்தினருடன் தொழுகை  நடத்தினர். சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இஸ்லாமியிர்கள் மட்டும் வீட்டில் கொண்டாடினர். மற்ற இடங்களில் நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிப்புகள், பிரியாணிகள் வழங்கி கொண்டாடினர்.   தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம்  உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி எளிமையான முறையில் ரம்ஜானை கொண்டாடினர்.


Tags : homes ,poor ,Tamil Nadu Ramzan ,holidays ,Tamil Nadu , Tamil Nadu, Ramzan festival, school days, corona, curfew
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை