×

ஊரு விட்டு ஊரு வந்து குடிக்கச் சொல்லுதோ... சென்னை குடிமகன்களை வெளுத்து கட்டினர் பெண்கள்

* மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடை முற்றுகை  
* குடைகளை உடைத்து விரட்டி அடித்தனர்

சென்னை:  மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.   திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் நேற்று முன்தினம் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. சென்னையை ஒட்டியுள்ள இந்த கடையில் நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் மதுவாங்கி செல்கின்றனர். இந்நிலையில் கிராம பெண்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுவாங்க குடைகளுடன் வரிசையில் நின்றிருந்த குடிமகன்களின் குடைகளை இழுத்து தள்ளி மதுவாங்க விடாமல் விரட்டினர். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இந்த கடையில் மதுவாங்குவதற்காக  சென்னையின் எல்லையில் உள்ள இந்த திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் கடை குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ளது. இக் கடைக்கு எண்ணூர், திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட சென்னை பகுதிகளை சேர்ந்தோர் அதிகளவில் வந்து மதுவாங்குகின்றனர். இதனால் தங்களது கிராமத்தில் கொரோனா தொற்று உருவாகும் அபாயம் இருப்பதாக பெண்கள் தெரிவித்தனர். அதோடு மட்டுமல்லாமல் சென்னை குடிமகன்கள்  வீடுகளின் வாசலில் அமர்ந்து குடித்து விட்டு பெண்களிடம் கலாட்டா செய்வதாகவும் புகார் தெரிவித்தனர்.   இதையடுத்து போராட்டம் நடத்திய பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.


Tags : city ,women , Chennai, Citizens, Women, Thiruvallur District, Task Shop
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்