×

சுமார் 15,000 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும்; மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால்

டெல்லி: இந்த முறை நாடு முழுவதும் சுமார் 15,000 மையங்களில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் 15,000 மையங்களில் நடைபெறவுள்ளது. முன்னதாக 3,000 மையங்களில் தேர்வுகள் நடத்த தோட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்த தேர்வுகளை மீண்டும் மே மாதம் நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு இருந்தது. ஆனால், மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், தேர்வுகள் நடத்துவது தொடர்பாக கடந்த தேதியை 15ம் தேதி சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்தது.

அதன்படி, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிவரை 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் மற்றும் சானிடைசர்களை கையேடு கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில், அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மொத்தம் 15,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : examination centers ,Ramesh Pokiri ,CBSE , Examination Centers, CBSE Examinations, Union Minister, Ramesh Bokriyal
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...