×

ஒரே டிரான்ஸ்பார்மர் மூன்று முறை வெடித்ததால் விபரீதம் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் 100 ஏக்கர் குறுவை சாகுபடி ‘அவுட்’: மின்வாரியத்துறை அலட்சியம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள பட்டவர்த்தி காட்டுத்தெரு பகுதியில் சுமார் 75 ஏக்கர் முதல் 100 ஏக்கர் வரை நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது குறுவை விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயத்தை ஆரம்பிக்கும்போதே பிப்ரவரி மாத இறுதியில் காட்டுத்தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் புகைந்து விட்டது. அந்த டிரான்ஸ்பார்மரை மின்வாரியத்துறையினர் கழட்டி சென்று ரிப்பேர் செய்து கொண்டு வந்து மாட்டினர், மார்ச் மாதத்தில் மீண்டும் எரிந்து சேதமானது, தற்பொழுது 3வது முறையாக டிரான்ஸ்பார்மர் புகைந்து விட்டது. விவசாயிகளே டிரான்ஸ்பார்மரை சரி செய்ய கொண்டுசென்றால், இந்த டிரான்ஸ்பார்மரை எத்தனை முறை காயில் சுற்றினாலும் எரிந்துதான் போகும் என்று கைவிரித்துவிட்டனர்.

கடந்த 4 நாட்களாக நட்ட பயிர் காய்ந்து கருகி வருகிறது. நாற்று பறிக்க வேண்டியவைகள் கருகாமல் இருக்க கைபம்பு மூலம் தண்ணீ ஊற்றி வருகின்றனர். நட்ட வயல் காய்ந்து வெடித்து வருகிறது. மின்சாரவாரிய அலட்சியத்தால் இன்றைக்கு 25 விவசாய குடும்பங்கள் விவசாயத்தை இழந்து தவித்து வருகின்றது. உடனடியாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து புதிய டிரான்ஸ்பார்மர் வைத்தால் மீண்டும் குறுவை நடவு செய்ய ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Transformer Explosive , 100-acre short ,cultivation , crops ,watering
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...