×

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழப்பு!!


சென்னை : சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.வடபழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயதுமுதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கே.எம்.சி மருத்துவமனையில் விருகம்பாக்கத்தை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபரும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர்.அதேபோல சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள், திருவள்ளூரை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவரும், கொடுங்கையூரை சேர்ந்த 46 வயது ஆண் நபர் ஆவார்கள். ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மண்ணடியை சேர்ந்த 75 வயது முதியவர் பலியாகியுள்ளார்.இதனை தொடர்ந்து, பூந்தமல்லியை சேர்ந்த 75 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேபோல, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஓட்டேரியை சேர்ந்த 46 வயது ஆண் நபர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Tags : Chennai , Madras, corona, infection, treatment, 8 people, casualties
× RELATED சென்னை அமலாக்கத்துறையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!