×

மூகூர்த்த நாளான நேற்று குன்றம் கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்

திருப்பரங்குன்றம்: ஊரடங்கால் முகூர்த்த நாளான நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி  கோயிலில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தமிழ் மாதமான வைகாசி மாதம் வளர்பிறை முகூர்த்த நாட்களில் தினமும் 300க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களாக கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் வாசல் மூடப்பட்டுள்ளது.

முக்கிய முகூர்த்த நாளான நேற்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மூடப்பட்ட வாசல் முன்பு 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் குறைந்த அளவிலான உறவினர்கள் ஆரவாரம் இன்றி அமைதியாக முககவசம் அணிந்தபடி சமூக இடைவெளியுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags : weddings ,Kundram Temple , large number , weddings , threshold , Kundram Temple yesterday
× RELATED மதுரையை ஆட்டிப்படைக்கும் கொரோனா.: பாதிப்பு எண்ணிக்கை 5,000-ஐ கடந்தது