×

கேரட் விலை வீழ்ச்சி :விவசாயிகள் வேதனை

குன்னூர்: கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் கேரட் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அது மட்டுமின்றி வெளி மாநிலங்களான பெங்களூர், கேரளாபோன்ற பகுதிகளுக்கும் அனுப்பப்படும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் முதலே கேரட் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனையாவது வழக்கம்.

ஆனால்  ஊரடங்கு உத்தரவால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் கேரட் கிலோ ரூ.18க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கேரட் நாற்று நடுவது முதல் அறுவடை செய்வது வரை செலவழித்த தொகை, கேரட் அறுவடைக்கூலி என லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவிட்ட நிலையில் கேரட் விைல வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து தற்போது விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : fall , carrot prices, agony , farmers
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...