×

இந்த பண்டிகையில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ரம்ஜான் வாழ்த்து..!

டெல்லி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு. இம்மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பிருப்பது வழக்கம். ஷவ்வால் மாதம் 29ம் நாளில்  வானில் தோன்றும் பிறையை வைத்து ரமலான் நோன்பு  தொடங்கப்படும். அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவார்கள்.  இந்நிலையில், ரமலான் நோன்பு தொடங்குவதற்கான பிறை சென்னையில் கடந்த 24ம் தேதி காணப்பட்டது. எனவே மறுநாள் 25ம் தேதி முதல்
இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொண்டு வருகின்றனர்.

ரமலான் மாத இறுதிநாளில் மீண்டும் பிறை தென்பட்ட மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில், தமிழகத்தில் நேற்று பிறை தெரியவில்லை.  ஆதலால் இன்று ரமலான் பிறை 30வது நாளாக கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். 25ம் தேதி இன்று ஈதுல் ஃ பித்ர் பெருநாள் ஆகும். அதன்படி, நாடு முழுவதும்  இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்துகின்றனர்.  இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்  என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி:

அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பது ரமலான். தேவையானவர்களுக்கு அக்கறையுடன் உதவுவதை இந்நாள் உணர்த்துகிறது. சமூக  இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாட இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி:

இந்த திருவிழா சமூகத்தின் பரிதாபம், இரக்கம், நல்லிணக்கம் ஆகியவற்றை குறிக்கிறது. கொரோனா தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான  சமூக இடைவெளியுடன் வீட்டிலேயே இருந்து ஈதுல் கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.  

ஈதுல் ஃ பித்ர் தினத்தன்று நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஹாதி வாழ்த்துக்கள். உறவினர்களுடன் பல மாதங்கள் உண்ணாவிரதம் இருந்தபின் புனித ரமலான் மாதத்தை  கொண்டாடுகிறது என இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி:

ரம்ஜான் பண்டிகையில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் அதிகரிக்கட்டும். இந்நாளில், அனைவரும் வளமாகவும் மகிழச்சியுடன் இருக்க ஆண்டவனை  வேண்டுகிறேன் என இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Vice President ,Ramzan ,President ,festival , May compassion, brotherhood and harmony be increased in this festival: President, Vice President, Prime Minister, Ramzan live ..!
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...