×

முஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்

ஜகார்த்தா: உலகில் உள்ள முஸ்லிம் நாடுகள் கொரோனா வைரஸ், ஊரடங்குடன் ரம்ஜான் பெருநாளை கொண்டாடியது. முஸ்லிம் நாடுகளில் வழக்கமாக மூன்று நாட்கள் காலை முதல் மாலை வரை கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா வைரஸ், ஊரடங்கினால் களையிழந்து கொண்டாடப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் அதிகளவிலான முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேஷியாவில் குடும்பங்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து பொது கொண்டாட்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நகரங்களில் கார்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மசூதிகளிலும், மைதானங்களில் தொழுகை செய்யவும், சிறிய அளவிலான கூட்டு பிரார்த்தனைக்கும் அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான மலேசியாவில் பெருந்திரளான கூட்டு பிரார்த்தனைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வீட்டை விட்டு வெளியேறிய 5 ஆயிரம் கார்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

20 அல்லது 30 பேர் மட்டும் கூடி தொழுகை நடத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை பொருத்தவரை முதல் முறையாக அந்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஒரே நாளில் கொண்டாடப்பட்டுள்ளது. கராச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்து கொண்டனர். ஈரானில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில், சில மசூதிகளில் மட்டும் கூட்டு பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துருக்கி, ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகள் 24 மணி நேரமும் ஊரடங்கு பிறப்பித்துள்ளன. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சுறுத்தல், பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் கொண்டாட்டம் உற்சாகமாக இல்லை.

கேரளா, காஷ்மீரில் கொண்டாட்டம் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், கேரளாவில் மட்டும் ரம்ஜான் நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகை செய்தனர். நாட்டில் உள்ள பிற பகுதிகளில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சில மசூதிகளில் மட்டும் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

Tags : Ramadan Celebration of Curfew ,Countries ,celebration , Muslim countries, curfew, celebration of Ramzan
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...