×

ஆப்கனில் தீவிரவாதிகள் 3 நாள் போர் நிறுத்தம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரம்ஜான் பண்டிகையையொட்டி 3 நாட்களுக்கு அனைத்து முஜாகிதீன்களும் பாதுகாப்புக்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே எதிரிகள் எந்த பகுதியில் இருந்தாலும் தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம்’ என கூறப்பட்டுள்ளது. இதை வரவேற்றுள்ள அதிபர் அஷ்ரப் கனி, அரசு படைகளும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.


Tags : ceasefire ,Afghanistan , Pakistan, militants, ceasefire
× RELATED அசர்பைஜான்-அர்மீனியா போர் நிறுத்த ஒப்பந்தம்