×

ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்: கவர்னர், எடப்பாடி, மு.க.ஸ்டாலின் உட்பட கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கவர்னர், எடப்பாடி, மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் பன்வாரிலால் புரோகித் :அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் அனைவரும் நட்பு, சகோதரத்துவம், பரஸ்பர மரியாதை, இரக்கம், அன்பு மற்றும் தாரளமாக உதவும் மனப்பான்மையை வலுப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : புனித ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது  உளமார்ந்த  ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் : திமுகவுக்கும் - இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான நல்லுறவு - அண்ணா, கலைஞர் என நீடித்து நிலைத்து - தற்போதும் அது தொடர்ந்து வருகிறது. ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் - நல்வாழ்வும் மேலும் உயர்ந்து,  சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திமுக சார்பில் இஸ்லாமிய மக்கள்  ரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ் :மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை  உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ : சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் உறுதி கொண்டு, இஸ்லாமியப் பெருமக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் : ஏழை, எளியவர்கள் மீது பரிவுகாட்டி, உண்ண உணவளித்து, உடுக்க உடைகொடுத்து, தானதர்மங்கள் செய்து, முப்பது நாட்கள் புனிதநோன்பினை முடித்துக்கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் : இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, விருந்தோம்பல் செய்து, உதவிகள் செய்து, மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வளமுடன், நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க த.மா.கா சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் : மானிட சமுதாயத்தை நிலைகுலைய செய்து வரும் கொரோ னா விஷக்கிருமி விரைவில் விலகிடவும் நாட்டு மக்களும் நலனில் மக்களும் மன நிம்மதியோடும், அமைதியோடும், பூரண நலத்தோடும் வாழ்ந்திடவும் வாழ்த்துவோம். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி : ரமலான் நோன்பும், குரானும் வழங்கும் போதனைகளை மதித்து உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை பெருக்கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக் கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் உறுதியேற்போம்.

இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி.சண்முகம், கோகுலம் மக்கள் கட்சி தலைவர் எம்.வீ.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாரயணன்,   பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சமக தலைவர் சரத்குமார், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



Tags : Ramzan: Greeting ,party leaders ,Edappadi ,Governor ,MK Stalin ,MK Stalin Ramazan Celebration: Party Leaders of Greetings , Ramzan Festival, Governor, Edappadi, MK Stalin, Party Leaders, Greetings
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்