×

பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது

அண்ணாநகர்: வில்லிவாக்கம்  பகுதியில் உள்ள துணிக்கடைக்கு எதிரில் நேற்று நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (30) என்பதும், வில்லிவாக்கம், கொரட்டூர்,  அயனாவரம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி ஆன்லைனில் விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


Tags : Man arreste,stealing bike
× RELATED கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது