×

சென்னையில் அம்பத்தூர், கிண்டி உட்பட 17 தொழிற்பேட்டைகள் இயங்க அனுமதி

* 25% தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும்
* கட்டுப்பாட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தடை

சென்னை,: சென்னையில் உள்ள கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள்  இன்று முதல் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்தொற்று  தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  தற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகளை இயக்க, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினரது கோரிக்கையை பரிசீலித்து,

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளின் எல்லைக்குட்படாத தொழிற்பேட்டைகள், அதாவது, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், இன்று முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25 சதவிகித தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை.

* தினமும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* தொழிற்சாலையில் உள்ள கழிப்பறையை தினமும் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு பணியிலிருந்து விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.
* சோப்பு மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும் நடைமுறையை பின்பற்றவும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தவும், போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
* பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ambattur ,sites ,Kindi ,Chennai , Chennai, Ambattur, Kindi, 17 industrial areas
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...