×

வண்டலூர் உட்கோட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறப்பு

கூடுவாஞ்சேரி: கொரோனா பரவலை தடுக்க வரும் 31ம் தேதி வரை, 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உட்கோட்டத்தில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்ணன் மற்றும் வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், இந்த கடைகளுக்கு மதுபானம் வாங்க வருவோர் அனைவரும் முககவசம் அணிந்து கொண்டு குடைகளுடன் வரவேண்டும். மேலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதில், மதுபானம் வாங்க வருவோர் மாவட்டம் விட்டு மாவட்டம் வரக்கூடாது. இருசக்கர வாகனங்களில் வருவோர் உரிய ஆவணங்களுடன் வரவேண்டும். இவற்றை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Opening ,Task Shop ,Vandalur Udyogam ,Vandalur Udyogam Opening Task Shop , Vandalur Ucottam, Task Shop, Corona, Curfew
× RELATED டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்