×

சீரமைக்கப்படும் மேம்பால சாலை பணிகள்: எம்எல்ஏ, எம்பி ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருமுக்கூடல் கிராமத்தில் மேம்பால ரவுண்டானா கனரக வாகனங்களால் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இந்த ரவுண்டானா மற்றும் சாலையை சீரமைக்க கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து 45 லட்சம், எம்பி மேம்பாட்டு நிதியில் இருந்து 36 லட்சம் என மொத்தம் 81 லட்சத்தில் மேம்பால ரவுண்டானா சாலை சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் நேற்று சாலை பணிகளை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், நிர்வாகி நடராஜன் உள்பட பலர் இருந்தனர்.

Tags : MLA , Road flyovers, MLA, MP
× RELATED பொது இட ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட...