×

கொரோனா பாதிப்பு 731 ஆக அதிகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் பூந்தமல்லி நகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சில ஒன்றியங்களில் 34 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 34 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 731 ஆக உயர்ந்துள்ளது. இதில், இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். மேலும், 270 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.


Tags : corona
× RELATED ஒரே நாளில் சவரன் ரூ.424 அதிகரிப்பு