×

கேரளாவில் பெண் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில்  வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வரத்தொடங்கிய பின்னர் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வருகிறது. மே 22ம் ேததி 42 பேரும், 23ம் தேதி 62 பேரும், நேற்று  53 பேர் என 3 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 157 ஆனது.  இதன்படி நேற்று சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்  நேற்று மேலும் ஒரு பெண் கொரோனாவுக்கு பலியானார். வயநாடு மாவட்டம்  கல்பெட்டா பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண் துபாயில் இருந்து கடந்த 20ம் தேதி ஊர் திரும்பினார். கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா உறுதியாகி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார்.  இதனால்  கேரளாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  இதற்கிடையே கண்ணூரைச் சேர்ந்த 18 வயது வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து  ஊருக்கு வந்திருந்தார். அவருக்கு காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டதால்  அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட பரிசோதனையில் கொரோனா  இல்லை எனத் தெரியவந்தது. திடீரென நேற்று அவர் இறந்தார். மூளையில் ஏற்பட்ட  பாதிப்பால் அவர் இறந்ததாகவும் கொரோனா காரணம் இல்லை என்றும் மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

தலையில் பலாப்பழம் விழுந்தவருக்கு கொரோனா
காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 40 வயதான ஆட்டோ டிரைவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு கண்ணூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டருகே நின்ற பலா மரத்தில் இருந்து பலாப்பழம் பறிக்க முயற்சித்துள்ளார். இதில் ஒரு பெரிய பலாப்பழம் எதிர்பாராதவிதமாக அவரது தலையில் விழுந்தது. படுகாயமடைந்த அவரை உடனடியாக பரியாறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவருக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் தீர்மானித்தனர்.

இதற்கிடையே சிவப்பு மண்டலமான காசர்கோட்டில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் அறிகுறி எதுவும் இல்லாமல் இதுபோல பலருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Woman Kills In Kerala Woman Kills ,Kerala , Woman Kills ,Kerala
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...