×

ஊட்டி அருகே தாயை பிரிந்து தவித்த சிறுத்தை குட்டிகள்

ஊட்டி: ஊட்டி  அருகேயுள்ள இத்தலார் கோழிக்கரை பகுதியில் தேயிலை தோட்டத்தில்  பிறந்த சில  நாட்களே ஆன சிறுத்தை குட்டிகள் தாயை பிரிந்து தவித்த நிலையில், மீண்டும்  தேடி வந்த தாய் சிறுத்தை அழைத்து சென்றது. ஊட்டி  அருகேயுள்ள இத்தலார் கோழிக்கரை பகுதியில் புதர் ஒன்றில் இரண்டு சிறுத்தை குட்டிகள் தாயை  பிரிந்து தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு  தகவல் அளித்தனர். மேலும்,  இதனை பலரும் செல்போன்களில் போட்டோ எடுத்தும்,  வீடியோ எடுத்தும்  இணையதளங்களில் வெளியிட்டனர். சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை பார்வையிட்டனர்.

பிறந்து சில நாட்களே ஆன நிலையில் சிறுத்தை குட்டிகள் பாலுக்காக தவித்து வந்தது தெரியவந்தது. மேலும் இதே பகுதியில் தாய் சிறுத்தையும் இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் கூடி இருந்த மக்களை அப்புறப்படுத்தி மறைவில் காத்திருந்தனர். அப்போது சற்று நேரத்தில் அங்கு வந்த தாய் சிறுத்தை தனது இரண்டு குட்டிகளையும் அழைத்து கொண்டு வனப்பகுதிக்கு சென்றது. தொடர்ந்து அந்த சிறுத்தை குட்டிகள் மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் வராமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தோட்ட தொழிலாளர்கள் அதிகம் நடமாடும் கோழிக்கரையில் சிறுத்தை குட்டியுடன் வந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ooty Leopard ,Ooty , Ooty, leopard cubs
× RELATED தாய் தருவது பிறப்பு மருத்துவர்கள் தருவது மறுபிறப்பு