×

விதிமுறைகளை மீறும் இறைச்சி கடைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மார்த்தாண்டம்: ஆடு, மாடுகளை வதம் செய்யவும், இறைச்சி விற்பனைக்கும் பல விதிமுறைகள் உள்ளன. பொது இடங்களில் ஆடு, மாடுகளை வெட்டக்கூடாது. வதை கூடத்தில் சுகாதாரமான முறையில் வெட்டி கடைகளில் விதிமுறைக்கு உள்பட்டு விற்பனை செய்யலாம். இறந்த ஆடு, மாடுகள், நோய்வாய்ப்பட்டவை போன்றவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக்கூடாது. ஆனால் குமரி மாவட்டத்தில் பல இறைச்சிக்கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. நேற்று இரவிப்புதூர்க்கடை சந்திப்பில் உள்ள ஒரு இறைச்சிக்கடையில் விற்பனை செய்வதற்காக, அருகில் தேசிய நெடுஞ்சாலையோரமாக மாடு ஒன்றை வெட்டி அதன் தோலை உரித்து கொண்டிருந்தனர்.

பொது மக்கள் செல்லும் வழியில் இதுபோன்ற செயல் கருணை மனதுள்ளவர்கள், விலங்குகள் ஆர்வலர்களை அதிருப்தி அடைய செய்தது. ஆனால் போலீசாரோ, சுகாதார அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களிலும் விதிமுறைகளை மீறி இறைச்சி விற்பனை நடந்து வருகிறது. இவற்றை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Meat shops , Meat Shops, Officers
× RELATED கும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை...