×

கொரோனா இல்லாத கோவா; உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரத் தடையில்லை..அரசு அறிவிப்பு

கோவா: கொரோனா இல்லாத மாநிலமாக திகழும் கோவாவில், உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரத் தடையில்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். சுற்றுலாவுக்கு பெயர் போன கோவா மாநிலத்தில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. வெறும் 7 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர்களும் குணம் அடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அண்மையில் திடீரென கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தற்போது மொத்தம் 39 பேர் கோவாவில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

சுற்றுலாவே முக்கியத் தொழிலாக விளங்கும் கோவாவில் கொரோனா தாக்கம் காரணமாக அந்த தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளதோடு, அதனை சார்ந்த வியாபாரிகள், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தற்காலிகமான இழப்பு தான் என தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், சுற்றுலா தொழிலிலும் விரைவில் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா இல்லாத மாநிலமாக இருப்பதால், உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரலாம் என்றும், அதே சமயம் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகள் கோவா வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Goa ,Corona , Corona, Coimbatore, Local Tourist Places
× RELATED கோவையில் நீதிபதிக்கு கொரோனா 3 நீதிமன்றங்கள் மூடல்