×

கொரோனாவால் குல்பி தொழில் பாதிப்பு ராஜஸ்தானுக்கு டூவீலர்களில் 14 பேர் 2,142 கிமீ பயணம்: திருவில்லிபுத்தூரில் இருந்து கிளம்பினர்

திருவில்லிபுத்தூர்:  திருவில்லிபுத்தூரில் இருந்து சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு 14 இளைஞர்கள் டூவீலர்களில் 2,142 கிமீ  பயணம் மேற்கொண்டுள்ளனர்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் ராஜஸ்தான், பீகார், லக்னோ என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வடமாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி குல்பி ஐஸ், பானி பூரி, கூல்டிரிங்ஸ் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் உணவு கிடைக்காமல் தவித்தனர். இதனால் வடமாநில இளைஞர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தனர்.

இதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் உள்ள உள்ள பிலுவாடா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதுமாலி(35), சோனோவால் பீலா(17) , தினேஷ்வீல்(22),
ரத்தன்லால்(22), ஷோன்லால்(28),  ஜெயதேவ்கிஷன்(19) உள்பட 14 பேர், டூவீலர்கள் மூலம் ராஜஸ்தான்  செல்ல  முடிவு எடுத்தனர். திருவில்லிபுத்தூரில் இருந்து 2,142 கி.மீ தொலைவில் உள்ள ராஜஸ்தானுக்கு நேற்று  14 பேரும் டூவீலர்களில் புறப்பட்டுச் சென்றனர்.

Tags : Kulbai ,Corona 14 Two-Wheelers Travel ,Rajasthan , 14 , two-wheelers, Rajasthan , 2,142-km journey, Corvina
× RELATED 2024 ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிரான...