×

சென்னையில் சாதாரண வசதியுடன் வாழ மாதம் குறைந்தபட்சம் 25 ஆயிரம் தேவைப்படுகிறது: பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: பெப்சி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். பதிவு செய்யப்படாமல் 15 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் சாதாரண வசதியுடன் வாழ மாதம் குறைந்தபட்சம் 25 ஆயிரம் தேவைப்படுகிறது. படப்பிடிப்புகள் இல்லாததால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தொழில்துறைக்கு கிடைக்கும் எவ்வித உதவிகளும் திரைத்துறையினருக்கு கிடைப்பதில்லை என்று தெரிவித்த அவர் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளித்த முதல்வர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஃபெப்சி அமைப்பில் உள்ள 50 ஆயிரம் பேரில் 50 பேர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் நிலைமையை உணர்ந்து சம்பளத்தை குறைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னத்திரை படப்பிடிப்பில் 20 பேரை வைத்து நடத்துவது கடினம், படப்பிடிப்பிற்கு தளத்திற்கு 40 பேரை வைத்து நடத்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். திரைப்பட தொழிலாளர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தாலும் பரவாயில்லை, ஆனால் பசியால் வாடி இறக்கும் நிலை ஏற்படும் என தெரிகிறது. மேலும் ஊரடங்கால் 60% தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்றும், கஷ்டத்தில் இருக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : RK Selvamani Interview ,PENSI Organization ,Chennai ,Corona , Chennai, fepsi, Corona
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...