×

TN E-Pass கட்டாயம்; நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமை... விமான சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி  (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த 20-ம் தேதி அறிவித்தார். இதன்படி, வரும்  25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது. உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை  தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25ம் தேதி தமிழகத்தில்  விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும், விமான பயணிகளுக்கான புதிய  வழிகாட்டு நெறிமுறைகளை பல்வேறு மாநிலங்கள் வெளியிட்டு வருகின்றனர். பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு  ஆணையமும், மத்திய விமான போக்குவரத்து அமைச்சகமும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், விமான சேவை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு...

* விமானம் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் டி.என். இபாஸ் வலைத்தளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும்.
* விமான டிக்கெட் வாங்கியவுடன் தங்கள் விவரங்களை டி.என்.இ.பாஸ் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
* எந்த விமான நிலையத்துக்கு வந்து சேருவர் என்பதை டி.என்.இ.பாஸ் வலைதளத்தில் தெரிவிக்க வேண்டும்.

* தாங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரவில்லை என்பதற்கான உறுதியை தர வேண்டும்.
* கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
* நோய் அறிகுறி இல்லாமல் இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
* தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

* காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனை ஏதும் இல்லை என்பது குறித்தும் உறுதி மொழி அளிக்க வேண்டும்.
* காய்ச்சல், இருமல் பிரச்சனை ஏற்பட்டால் உடனே மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.


Tags : TN E-Pass ,Government ,Tamil Nadu , TN E-Pass Mandatory; 14 Days of Solitude Without Symptoms
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...