×

மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், அந்த பொய் வழக்குகளை எப்படி எதிர்க்கொள்வது என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் முக்கியமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கழக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

ஆலந்தூரில் நேற்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் அவர்மீது சாடப்பட்ட இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தின் அறிவுரையின் பேரில் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டார். சட்டரீதியாக போராடி மீட்ட திமுக வழக்கறிஞர்கள் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபடும் திமுக நிர்வாகிகள் மீது ஆளுங்கட்சியினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் பொய் வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.யுமான கார்த்திக் மீதும் மற்றும் கோவை, திருப்பூர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் மீது தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் திமுக தொண்டர்களை அடக்குமுறையில் இருந்து அரவணைத்து அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட்டு வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என்றும் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Tags : AIADMK ,DMK Advisory Meeting , AIADMK Government, Corruption List, DMK, Resolution, Fulfillment
× RELATED 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம்...