×

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (இன்று) காலை 10 மணியளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடக்கிறது. அதுபோது மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது, சட்டவிரோத-ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் பொருள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து போராட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Tags : District Secretary ,DMK ,meeting , MK Stalin, DMK District Secretary, MP, MLAs meeting
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு