×

ககன்யான் திட்டத்துக்கான இந்திய விண்வெளி வீரர்களின் பயிற்சி மீண்டும் தொடங்கியது

பெங்களூரூ: விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் திட்டத்திற்கு ரஷ்யாவில் இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட  பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது.  இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு விழா வரும் 2022ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய  விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில், விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அனுப்பப்படும் விண்கலத்தில் செல்லும் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கிய பயிற்சி கொரோனா தொற்று அபாயம் காரணமாக சில தினங்களுக்கு பின் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளதாக ரஷ்ய விண்வெளி கழகம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `‘இஸ்ரோ மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி முதல் இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு காகரின் ஆராய்ச்சி மற்றும் சோதனை பயிற்சி மையத்தில் மீண்டும் பயிற்சி தொடங்கியுள்ளது. நோய்தொற்று எதிர்ப்பு விதிமுறையை பின்பற்றி இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக இடைெவளியை கடைப்பிடித்தல், மருத்துவ முகக்கவசம் அணிதல் மற்றும் கையுறை அணிதல் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : astronauts ,Indian ,training , Gagayan Project, Indian Astronauts,
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...