×

உலக வங்கியில் இந்தியருக்கு உயர் பதவி

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியியை சேர்ந்தவர் அபாஸ் ஜா. உலக வங்கியின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான நகர்புற வளர்ச்சி மற்றும் பேரிடர் துயர் மேலாண்மை பயிற்சி இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகள் இவரது பொறுப்பில் இருந்தன. இந்நிலையில், இவர் உலக வங்கியின் தெற்கு ஆசிய பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துயர் துறையின் பயிற்சி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘அபாஸ் ஜா தெற்கு ஆசிய பிராந்தியத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான குழு, உலகில் நடைமுறையில் உள்ள பயிற்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுவார். தெற்காசிய நாடுகளுக்கும் அதன் அடுத்த தலைமுறையினருக்கும் உதவும் வகையில் உலக வங்கியின் இதரப் பகுதி பயிற்சி மேலாளர்களுடன் இணைந்து பணியாற்றி, உலக பிரச்னைகளுக்கு புதுமையான, சிறந்த தீ்ர்வுகளை ஜா வழங்குவார்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Indian ,World Bank , World Bank, India's highest office
× RELATED இந்திய பங்குச் சந்தைகள் காலை முதலே சரிவுடன் தொடக்கம்