×

பெங்களூரு உள்பட கர்நாடகாவில் நாளை காலை வரை முழு ஊரடங்கு

பெங்களூரு, : கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பெங்களூரு உள்பட கர்நாடகா மாநிலம் முழுவதும்  நாளை காலை 7 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை கர்நாடக முதல்வர்  எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது “ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்ட 31ம் தேதி வரை  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்’’ என  அறிவித்தார். அதன்படி  நேற்று மாலை 7 மணி முதல் நாளை காலை 7 மணிவரை  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து உள்ளிட்ட மிகவும்  அவசியமான பொருட்கள் விற்பனை மற்றும்  அவசியமான சேவைகளுக்கு மட்டும் இதில்  இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே  மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் கூறுகையில், “முதல்வர் உத்தரவின்பேரில்  பெங்களூருவில் 100 சதவீதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை காலை 7  மணி வரை இது அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். அவ்வாறு  வெளியே வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை  எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே கேரளாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் இதேபோன்று முழு ஊரடங்க உத்தரவு நடைமுறை அமலில் உள்ளது. குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே  வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை  2 ஆயிரத்தை நெருங்கியது. கர்நாடகாவில் கடந்த வாரம் வரை கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று  மேலும் 216 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 1959ஆனது. இறந்தவர்களின் எண்ணிக்கை 42  ஆகவும்  இருக்கிறது.

Tags : Karnataka ,Bangalore , Bangalore, Karnataka, curfew
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...