×

எல்லா உதவிகளையும் செய்கிறேன்: இலங்கை, மொரீஷியசுக்கு உதவிக்கரம் நீட்டும் மோடி

புதுடெல்லி: ‘கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கை, மொரீஷியஸ் நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும்,’ என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், `கொரோனா தொற்று, பொருளாதார பாதிப்பில் இருந்து நட்பு நாடான இலங்கை விடுபடுதவற்கு தேவையான ஆதரவை இந்தியா தொடர்ந்து அளிக்கும்,’ என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மோடியை தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் இந்திய தனியார் துறையினரின் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்து ஆலோசித்தார்.

இந்தியா உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் பேசிக் கொண்டனர். அேதபோல், மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜக்நாத்தை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ``இரு நாடுகளுக்கும் இடையே கலாசார மதிப்பீட்டு பகிர்வு உள்ளதாகவும் அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் சிறந்த நட்புறவு நீடிப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்த இக்கட்டான தருணத்தில், மொரீஷியஸ் சகோதர, சகோதரிகளுடன் இந்தியர்கள் துணை நிற்பதாக தெரிவித்தார்.


Tags : Sri Lanka ,Modi ,Mauritius , Sri Lanka, Mauritius, Modi
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்