×

நீட் பயிற்சிக்கு இலவச செயலி

சென்னை: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜெஇஇ., நீட் ஆகிய தேர்வுகளை எழுத இந்த ஆண்டு 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் நாடு முழுவதும் மேற்கண்ட நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க மத்திய மனித வள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, உயர்தர மாதிரித் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேசிய தேர்வுக்கான பயிற்சி(அபியாஸ்) என்ற செயலியை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு, ஜெஇஇ தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.  இதையடுத்து, தேசிய தேர்வு முகமை மூலம் தினமும் ஒரு மாதிரி தேர்வு நடத்தப்படும். மாதிரித் தேர்வுக்கான கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்த பிறகு இணைய தளத்தை பயன்படுத்தாமல் பதில் அளிக்க முடியும். அதற்கு பிறகு தாங்கள் எந்த அளவுக்கு விடை எழுதியுள்ளோம் என்றும் பரிசோதித்துக் கொள்ள முடியும்.

Tags : NeeT Training
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...