×

டாக்டரின் உடல் அடக்கத்தை எதிர்த்த 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கி இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பிரபல நரம்பியல் டாக்டர் சைமன் கொரோனா வைரஸ் தாக்கி கடந்த மாதம் இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு எடுத்து சென்றபோது, சிலர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, டாக்டரின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் வேலங்காடு சுடுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அண்ணாநகர் மற்றும் டி.பி.சத்திரம் போலீசார் தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்து 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான தமிழ்வேந்தன், குமரேசன், மஞ்சுளா உள்பட 11 பேர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  மனு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்னிலையல் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் சுடுகாடு அருகே வசிப்பவர்கள். கொரோனா வைரஸ் தொற்று குறித்த புரளியை உண்மை என்று நம்பி டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால், கொரோனா தொற்றினால் இறந்த டாக்டரின் உடலை பாதுகாப்புடன் அடக்கம் செய்வது குறித்து அந்த பகுதி மக்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்க வேண்டும். இரவு நேரத்தில் டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் சென்றுள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு, 11 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : persons ,doctor ,murder ,Icort , Dr. buried, conditional bail, HC
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...