×

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள்: அரசாணை வெளியீடு

சென்னை: நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:   பல்வேறு துறைகளிலும் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும் அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இதுகுறித்து நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி பணி விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான கருத்துருவினை உரிய வரைவு திருத்த அறிவிக்கையுடன் அரசுக்கு அனுப்புமாறு நகராட்சி நிர்வாக ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Cleaners, Cleaners, Govt
× RELATED மாநகராட்சி சார்பில் தூய்மை...