×

சென்னையின் 4 மண்டலங்களில் 1000 பேருக்கு மேல் பாதிப்பு: இதுவரை 66 பேர் மரணம்

சென்னை:  சென்னை மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 66 பேர் மரணமடைந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் 569  பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில்  பாதித்தவர்கள் எண்ணிக்கை  9,364 ஆக உயர்ந்துள்ளது.  இதில் 3,791  பேர் குணமடைந்துள்ளனர்.  66   பேர் உயிரிழந்துள்ளனர்.  5,461  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாநிலங்களைச் சேர்ந்த 46  பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக சென்னையில் குறிப்பிட்ட 4 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதன்படி ராயபுரத்தில்  1,768 பேர் , கோடம்பாக்கத்தில்  1,300  பேர், திருவிக நகரில் 1,079 பேர் தேனாம்பேட்டையில் 1000  பேர், தண்டையார்பேட்டையில் 881 பேர், அண்ணாநகரில்   783 பேர், வளசரவாக்கத்தில் 650 பேர், அடையாரில் 513  பேர், அம்பத்தூரில் 402  பேர்,  திருவொற்றியூரில் 205 பேர் மாதவரத்தில் 192 பேர்,  மணலியில் 108 பேர், சோழிங்கநல்லூரில்  148 பேர்,பெருங்குடியில் 137 பேர், ஆலந்தூரில் 100  பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.28 சதவீதம் ஆண்கள், 39.70 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வயது வாரியாக பார்த்தால், ஆண்களில் 9 வயது வரை உள்ள 224 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 485 பேர்,  20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 1,233 பேரும்  , 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 1,263 பேரும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 1,750 பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 800 பேர், 60 முதல் 69 வயதுவரையுள்ள 393 பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 134 பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பெண்களில் 9 வயது வரை உள்ள 197 குழந்தைகள், 10 முதல் 19 வயதுள்ள 354  பேர்,  20 முதல் 29 வரை வயதுக்கு உட்பட்ட 810  பேரும்  , 30 முதல் 39 வரை வயதுக்கு உட்பட்ட 760  பேரும், 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 640  பேர், 50 முதல் 60 வயதுக்குட்பட்ட 508  பேர், 60 முதல் 69 வயதுவரையுள்ள 279  பேர், 70 முதல் 79 வயது வரையுள்ள 116  பேர், 80 வயதுக்கு மேற்பட்ட 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : deaths ,Chennai ,zones , Chennai, 4 zones, Corona, Chennai Corporation
× RELATED சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற...