×

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நிதி கேட்டு வந்த 40 ஆட்டோ டிரைவர்கள் கைது: ஊரடங்கை மீறியதாக நடவடிக்கை

வேலூர்: கொரோனா ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஆட்டோவில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்து அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 40க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் குவிந்தனர். நிவாரண நிதி கேட்டு மனு அளிக்க உள்ளதாக அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கூட்டமாக நிற்கக்கூடாது, என்று போலீசார் தடுத்தனர். தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் ஊரடங்கு உத்தரவு மீறி கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடாது, என்று கூறி அனைவரையும் வெளியேற்றினர்.

அப்போது, ஆட்டோ டிரைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் முரளியிடம் மனு அளித்தனர். அதில், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட மாதங்களுக்கு தலா 10 ஆயிரம் நிவாரண உதவி அளிக்க வேண்டும். ஆட்டோக்களுக்கான எப்சி, பெர்மிட், இன்சூரன்ஸ் ஆகியவைகளை 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் எரிபொருளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். இதனிடையே ஊரடங்கு உத்தரவை மீறியதாக கூறி 40 ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் கைது செய்தனர். மாலையில்  விடுவிக்கப்பட்டனர்.


Tags : drivers ,office ,collector ,Vellore ,Vellore Collector ,auto drivers , Vellore Collector's Office, Corona Finance, Auto Drivers Arrested, Curfew
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...