×

சென்னையில் இருந்து லாரியில் தப்பி வந்த கொரோனா நோயாளி: திருப்பத்தூரில் சுகாதாரத்துறை மடக்கியது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே பலப்பநத்தம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர், சென்னை வேளச்சேரி ராம் நகர் பகுதியில் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்த இவருக்கு காய்ச்சல், சளி பிரச்னை ஏற்பட்டது. அவரை சென்னை மருத்துவ குழுவினர் அவரது ரத்தம், சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம் அந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சுகாதாரத்துறையினர் சென்ற போதுதான் அவர் ஊருக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக அவருடைய புகைப்படத்தை திருப்பத்தூர் மாவட்ட போலீசார் மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பினர்.

இந்நிலையில் அந்த முதியவர் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு துணிக்கடை முன் அமர்ந்திருந்ததை பார்த்து மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து லாரியில் புறப்பட்டு வாணியம்பாடிக்கு நேற்று அதிகாலை வந்ததாகவும், அங்கிருந்து 500 கொடுத்து ஒரு ஆட்டோவில் திருப்பத்தூர் வந்ததாகவும் கூறினார். பின்னர் அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : patient ,Corona ,Chennai ,Health department ,Tirupathur Corona , Chennai, Lorry, Corona Patient, Tirupathur, Health Department
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...