×

பண்டைய மதுரை நகரம் செயல்பட்ட மணலூரில் அகழாய்வு பணிகள் துவக்கம்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட அகழாய்வு கடந்த 20ம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. 6ம் கட்ட அகழாய்வு ரூ.40 லட்சம் செலவில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இடம் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. தற்போது கீழடியில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டதால், மணலூரில் யோகலட்சுமி என்பவரது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அகழாய்வு பணிகள் நேற்று காலை முதல் தொடங்கின.

தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம், தொல்லியல் அலுவலர்கள் பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பழம்பெரும் காப்பியமான திருவிளையாடல் புராணம் உள்ளிட்டவற்றில், பண்டைய மதுரை நகரம் மணலூரில் செயல்பட்டதாக கூறப்படுவதால், மணலூர் அகழாய்வில் கூடுதல் ஆதாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. 56 நாட்கள் பணிகள் நடக்காததால், கூடுதல் நாட்கள் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறை முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Inauguration ,Manalur , Sivaganga District, Thiruppavanam, Kodai, Coronavirus
× RELATED வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா