×

அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தினால் கடுமையான நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் நிவாரண பொருட்களை வழங்கிய  பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை,  காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் வேறு  மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 முதல் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும்.  அதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.  
சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலமாக அனைத்து  ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை  நடத்தக்கூடாது.

இதுவரை மாணவர் சேர்க்கைக்கான எவ்வித அறிவிப்பும் அரசு வழங்கவில்லை. அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிகள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் கட்டணம்  செலுத்த வற்புறுத்துவதாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை  எடுக்கப்படும். அதேபோன்று சிறப்பு வகுப்பு, நுழைவுத்தேர்வு நடத்துவது  குறித்து புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ்  குழந்தைகள் படிப்புக்காக தேசிய குழந்தைகள் திட்டம் மூலம் புதிய பள்ளி  கட்டிடம் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Tags : State Directive on Violation in Student Admissions for Severe Action ,Senkottaiyan ,Private Schools , Tamil Nadu Government, Student, Private Schools, Senkottaiyan
× RELATED மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்காக...