×

ஓட்டேரி பகுதியில் குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா

பெரம்பூர்: திருவிக நகர்  மண்டலத்தில் நேற்று 52 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும்  நோய் தொற்று ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட  ஆடுதொட்டி பகுதியில் 3 பேருக்கும், திருவிக நகர் பகுதியில் 3 பேருக்கும்,  கேஎம் கார்டன் பகுதியில் ஒருவருக்கும், புளியந்தோப்பு பகுதியில் 20 பேருக்கும் நேற்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 4 பேருக்கும், திருவிக நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், பெரவள்ளூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2 பேருக்கும், ஜிகேஎம் காலனி 28வது தெரு மற்றும் லோகோ ஓர்கஸ் ரோடு   ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செம்பியம் காவல் நிலையத்துக்குட்பட்ட நட்டால் கார்டன் 2வது தெரு ரங்கசாயி தெரு, பழனி தெரு, கக்கன்ஜி காலனி ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், ஓட்டேரி பெல்விடர் வில்லேஜ் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும், பாஷியம் 2வது தெருவில் 11 வயது சிறுவனுக்கும், பனந்தோப்பு காலனியை சேர்ந்த 26 வயது ரயில்வே போலீசுக்கும்  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்த  36 வயது நபர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்,  கடந்த 5ம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Corona ,area ,Ottery , Oteri area, healed, corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...