×

விகேசி நிறுவனம் சார்பில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவோருக்கு நினைவு பரிசு

சென்னை: முன்னணி பிராண்டான வாக்கரு செப்பல்ஸ் மற்றும் ஷூ தயாரிப்பு நிறுவனமான விகேசி சார்பில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த இரவு பகலாக பாடுபடும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்துகொண்டு 618 ஜோடி ஷூக்களை நினைவு பரிசாக இஎஸ்ஐ மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் வழங்கினார்.

விகேசி குரூப் நிர்வாக இயக்குனர் நௌசாத், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், விகேசி நிறுவன இயக்குனர் முஸ்தபா யாசின், இயக்குனர்கள் ராஜேஷ் குரியன், பினு ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Coroner Prevention Services ,Wiki Company ,VKC Company , VKC Company, Corona, Curfew
× RELATED கோவை மாநகராட்சி சார்பில் இன்று மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்