×

பச்சை மண்டலமாக மாறிய ஈரோட்டில் மீண்டும் கொரோனா.: கோபி அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு தொற்று

ஈரோடு: பச்சை மண்டலமாக இருந்த ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே விபத்தில் சிக்கி காயமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் வசித்த வீட்டை சுற்றி ஐந்து தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 1000 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஈரோட்டில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்து விட்ட நிலையில் 69 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கடந்த 36 நாட்களாக புதியதாக ஒருவருக்கு கூட தொற்று ஏற்படாததால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளதால் ஈரோடு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.    


Tags : Eritrea ,zone ,Erode ,green zone , Coronation, Eritrea, ,green zone
× RELATED சிகரெட் பிடிப்பதை வீட்டில் சொல்வேன்...