×

ஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எல்.ஏ.: செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளரின் வீட்டை இடித்து எம்.எல்.ஏ அராஜகம்

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கு விதிகளை மீறி ஆளும் கட்சி எம்.எல்.ஏ பிறந்தநாளை கொண்டாடியதை செய்தியாக வெளியிட்டவரின் வீடு இடிக்கப்பட்டதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் நாராயண தொகுதி சட்டமன்ற எம்.எல்.ஏ கோபால் ரெட்டி ஏப்ரல் 7-ம் தேதி தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் பிறந்தநாளை கொண்டாடினர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில்  எம்.எல்.ஏ கோபால் ரெட்டி எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் எம்.எல்.ஏ குறித்து செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் பரமேஷ் என்பவர் புதிதாக கட்டிவந்த வீட்டை நகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக ஆக்கியுள்ளார்.

வெளியிட்டபத்திரிகையாளர் வீடு இடிக்கப்பட்டதற்கு தெலுங்கானா மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கு தேச கட்சியினர் ஊடகங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். செய்தியாளர் வீடு இடிக்கப்பட்டதுக்கு தெலுங்கானா செய்தியாளர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேவேளை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாலேசெய்தியாளர் வீடு இடிக்கப்பட்டதாக ஆளும் தெலுங்கு தேச கட்சி விளக்கம் அளித்துள்ளது.



Tags : birthday ,MLA , MLA ,celebrates, birthday, curfew
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி