×

கொரோனா அச்சத்துடன் ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்.: 3 மாதங்களாகியும் மீட்பு நடவடிக்கை இல்லை என புகார்

ஈரான்: கொரோனா அச்சத்துடன் மூன்று மாதங்களுக்கு மேலாக ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 700-க்கும் அதிகமான மீனவர்கள் ஈரானில் உள்ள தனி தீவுகளில் சிக்கியுள்ளனர்.

கொரோனா பேரிடர் தொடங்கியதும், தாயகத்துக்கு அனுப்பி வைக்கும்படி அங்கு உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் தூதரக அதிகாரிகள் தங்களது கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரானில் இருந்து கப்பலில் இந்திய திரும்புவதற்கான பயண கட்டத்தை செலுத்துவதற்கும் தயாராக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சத்துடன் ஒவ்வொரு நாளையும் கடத்தி வரும் மீனவர்களை இனியும் காலம் தாழ்த்தாமல் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Fishermen ,Iran ,Corona , Corona, fears ,fishermen ,Iran
× RELATED இலங்கை சிறையிலிருந்து...