×

கொரோனா 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது: அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்:கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் அமெரிக்காவில் முடக்கம் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் 213 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், மனித குலத்திற்கு பெரும் சவாலாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் மிக அதிக அளவில் உள்ளது. மொத்தம் 16.45 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97,647 பேர் பலியாகி உள்ளனர். 403,201 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில், வர்த்தகம் முடங்கியது. மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போய்விட்டது. இதன்காரணமாக அங்குள்ள 50 மாகாணங்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறந்து விட தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் நேற்று மிச்சிகன் மாகாணத்துக்கு டிரம்ப் சென்றார். அங்குள்ள போர்டு கார் உற்பத்தி தொழிற்சாலையை அவர் பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது  நிருபர்கள், “கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசும் என பேசப்படுகிறதே, நீங்கள் இதை எண்ணி கவலைப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டிரம்ப், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வீசினால் நாட்டை முடக்கி போடப்போவது இல்லை. இது மிகவும் தனித்துவமான சாத்தியம் என்று மக்கள் கூறுகிறார்கள். இது நிலையானது. நாங்கள் தீயை (கொரோனா வைரஸ்) அணைக்கப்போகிறோம். நாங்கள் நாட்டை முடக்கப்போவது இல்லை.நிரந்தரமாக பூட்டிப்போடுவது என்பது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. நமது நாடு, மூடிப்போடுவதற்கான ஒரு நாடு அல்ல.ஒரு போதும் முடிவுறாத முடக்கம், பொது சுகாதாரத்துக்கு பேரழிவாக அமையும். நமது மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நமது பொருளாதாரம், செயல்படும் பொருளாதாரமாக இருக்க வேண்டும், என்றார்.

Tags : Donald Trump ,wave ,Corona ,US , Corona, 2nd Wave, Blows, America, Freeze, President, Donald Trump, Action, Announcement
× RELATED அதிபருக்கான வேட்பாளர் தேர்வு : நிக்கி ஹாலே விலகல்