×

தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள  தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் காவல் அவசர தேவைக்கு இனி 100, 112ஐ அழைக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமா மாற்றம் செய்யப்பட்டதாக நேற்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் கைபேசியில் இருந்து காவல் அழைப்பு எண் 100/112 அழைப்புகளை காவல் கட்டுப்பாடு அறையில் பெறுவதில் இடர்பாடு ஏற்பட்டது.

எனவே பொதுமக்கள் தற்காலிகமாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதால் ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் தங்களது கைபேசியிலிருந்து 100,112ஐ இனி அழைக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Police, longer call, 100, 112, urgent ,Police, notice
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...