×

ஊரடங்கு காரணமாக மண்பாண்டத் தொழில் முடங்கியது.:தஞ்சையில் வறுமையால் வாடும் 500 குடும்பங்கள்...!

தஞ்சை: கொரோனா ஊரடங்கு காரணமாக மண்பாண்டத் தொழில் முற்றிலுமாக முடங்கியதால் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். தஞ்சை கீழ்வாசலில் 500-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். மண்பாண்டங்களை உற்பத்தி செய்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாததால் உபரி வருமானத்துக்கு வழி இல்லாதவர்களாக நிற்கின்றனர். மண்பாண்டம் செய்ய தேவையான மண்ணை எடுப்பதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது முதல் தங்கள் இடத்துக்கு கொண்டுவந்தது சேர்ப்பது வரை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட முடியாது என்பதால் அரசு சார்பில் ரூ.5000 நிவாரண தொகை அறிவித்தது. ஆண்டுதோறும் ஜனவரி மதம் வழங்கப்படும் நிவாரண தொகை இந்த ஆண்டு இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். வறுமையில் வாடும் எங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் சரியான நேரத்தில் அது கிடைத்தால் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : families ,asylum , Coronation ,halted, industry,500 families , poverty
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...